யாழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் – காவற்துறை சட்டமா அதிபர்

காவற்துறை மா அதிபர் நீதிமன்ற உத்தரவை மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்று காவற்துறை சட்டமா அதிபர் அதிபர் தெரிவித்துள்ளார்.

காவற்துறை மா அதிபர் பூஜித் டஜெயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் நீதிமன்றத்தின் தடையை மீறி போரராட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய காவற்துறை சட்டமா அதிபர், நாட்டின் சகல பகுதிகளிலும் ஒரே மாதிரியான சட்டமே அமுலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 071 75 82 222 மற்றும் 071 85 91 002 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இனி, பாரிய குற்றச் செயல்கள் தொடர்பிலும் முறைபாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]