உங்க வாழ்க்கையை பாருங்க, காயத்ரி ரகுராம் பதிலடி!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரின் பெயர் டோட்டல் டேமேஜ் என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு எங்கு திரும்பினாலும் ஓவியா ஆர்மி இவரை திட்டிக்கொண்டே இருந்தது. இதனால், ஒரு கட்டத்தில் காயத்ரி மிகவும் கோபமாகிவிட்டார்.
தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஒருவரைப் பின் தொடர்ந்து தாக்க எவ்வளவு வெட்டியாக இருக்க வேண்டும். இந்த கிண்டல் செய்பவர்களைப் போல நான் என்னை சரியானவள் என்று கூறவில்லை’.
என்னை கிண்டல் செய்பவர்களிடம் சொல்ல விரும்புவது இது தான். என்னிடம் நேரத்தை வீணாக்குகிறீர்கள். போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். புலம்புவதை நிறுத்துங்கள். உங்களுக்கு ஒரு யோசனை தருகிறேன். காயத்ரி மோசமானவள் என்று ரூம் போட்டு அழுதுவிடுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]