மெர்சல் ரீலீஸ் ஒரு நாள் தள்ளி போடப்பட்டுள்ளது!

mersalவிஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மெர்சல் படம் வரவுள்ளதாக முன்பே கூறப்பட்டது. அதை தொடர்ந்து படம் வருமா? என்ற நிலை உருவாகியது.

தற்போது அத்தனை பிரச்சனைகளையும் கடந்து மெர்சல் தீபாவளி அன்று அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் மெர்சல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலிஸ் செய்யவுள்ளனர், ஆந்திரா, தெலுங்கானாவில் இப்படம் பல திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

ஆனால், தமிழில் மட்டும் தான் அக்டோபர் 18-ம் தேதி மெர்சல் வருகின்றது, தெலுங்கில் இப்படம் ஒரு நாள் தள்ளி அக்டோபர் 19-ம் தேதி வரவிருக்கின்றதாம்.