இரண்டாவது போட்டியில் இலங்கையை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

இரண்டாவது போட்டியில் இலங்கையை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

இரண்டாவது போட்டியில்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மோதும் இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி ஒருகட்டத்தில் 79 ஓட்டங்களையெடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பாகிஸ்தான் அணி 6வது விக்கெட்டினை 101 ஓட்டங்களுக்கு இழந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் மற்றும் சஹப் கான் 7வது விக்கெட்டுக்கு ஜோடியாக 109 ஓட்டங்களை குவித்தனர்.

50 ஓவரின் முடிவில் பாகிஸ்தான் அணி 219 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட்டுக்களை இழந்தது. பாபர் ஆசாம் 101 ஓட்டங்களையும், சஹப் கான் 52 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது போட்டியில்

இலங்கை அணி சார்பில் கமகே 57/4 விக்கெட்டுகளையும், திசார பெரேரா 34/2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். லக்மல் மற்றும் வண்தர்செய் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

220 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறி ஆடியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தவண்ணம் இருந்தாலும் கேப்டன் உபுல் தரங்க நிதானமாக ஆடினார்.

இரண்டாவது போட்டியில்

இலங்கை அணி 187 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. உபுல் தரங்கா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களைப் பெற்றார். வண்தர்செய் 22 ஓட்டங்களையும் பெற்றார். பாகிஸ்தான் பந்துவீச்சில் சாஹப் கான் 47/3 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]