ஈராக்கின் வடக்கு பிராந்தியமான கிர்க்குக் பகுதியில் குர்திஷ் ஆயுதப் படைகளுக்கு எதிராக ஈராக் இராணுவம் விசேட இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில் கிர்க்குக் பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளை ஈரான் இராணுவத் தரப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த தகவலை குர்திஷ் ஆயுதத் தரப்பினர் மறுத்துள்ளனர்.
ஈராக்கில் இருந்து தனிநாடாக பிரிந்து செல்லும்பொருட்டு குர்திஷ் படைகள் ஈராக் அரச படைகளுடன் போராடிவருகின்றது.
அண்மையில், இதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டபோதும் அந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்திருந்தது.
இந்த நிலையில், ஈராக்கிய படைகள் புதிதாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]