49 முறைப்பாடுகளின் விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாரதூரமான இலஞ்ச ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இதுவரை 49 முறைப்பாடுகளின் விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


1599 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதனால் ஆணைக்குழுவின் கால எல்லை செப்டெம்பர் மாதம் 3ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

முறைப்பாடுகளை விசாரணை செய்து அறிக்கையிடும் அதிகாரம் மாத்திரமே ஆணைக்குழுவுக்கு காணப்படுவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.