49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்

49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்

இந்தோனேசியா புயலில் படகுடன் அடித்து செல்லப்பட்ட மீனவர் 49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் ஆல்டிநோவல் அடிலாங் (19) படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடம் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்கின்றன.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் புயல் தாக்கத்தில் அதில் அவரது படகு அடித்து செல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் கடலில் தொடர்ந்து தனியாக பயணம் செய்து கொண்டே இருந்த நிலையில் 49 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அவர் ஜப்பான் கடற்கரையை சென்றடைந்தார்.

வழியில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து சென்ற போதும், அவர்களிடம் உதவி கோரிய அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

49 நாட்களுக்கு பிறகு பனாமா நாட்டு டேங்கர் கப்பலுக்கு ரேடியோ சிக்னல் கொடுத்து தான் ஆபத்தில் இருப்பதை உணர்த்தினார்.

அவர்கள் அடிலாங்கை உயிருடன் மீட்டு ஜப்பான் அழைத்து வந்ததோடு, அங்கிருந்து அவர் இந்தோனேசியாவில் உள்ள தனது சொந்த ஊரான மனாடோவுக்கு சென்றார்.

கடலில் தனியாக பயணம் செய்த காலத்தில் மீன்களை பிடித்து அவற்றை படகு வீட்டின் கட்டைகளை விறகாக்கி சமைத்து சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக கூறினார்.

மேலும் கடல் நீரை துணியால் வடிகட்டி சிறிது உப்பை அகற்றி தண்ணீர் குடித்ததாகவும் கூறியுள்ள சம்பவம் மனதை உருக வைத்துள்ளது.

49 நாட்களுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]