4,765 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

கடந்த 4 நாட்களுக்குள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்திய சாரதிகள் 4,765 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதில் ஐவருக்கு எதிராக நாளை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக,  பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்,கொழும்பு மற்றும் கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பிரதான பாதைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டடுள்ள போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்திய சாரதிளுக்கு எதிராகவே இவ்வாறு  கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது