சென்சார் குழுவின் எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் பெற்றுள்ளது பலூன்

சென்சார் குழுவின் எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் பெற்றுள்ளது பலூன்.

சென்சார் குழுவின்

ஒரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதன் அறிவிப்பே அப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஆகும். எந்தவித கட்டும் இல்லாமல் ஒரு படம் சான்றிதழ் பெறுவது அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகத்தர்களுக்கு பெரும் பலம் சேர்க்கும்.

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி நடிப்பில், சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தை ’70mm Entertainment’ நிறுவனம் தயாரித்துள்ளது . யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘பலூன்’ உருவாகியுள்ளது. சென்சார் குழுவின் சான்றிதழ் பெறுவதற்கு சென்ற ‘பலூன்’ எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

இது குறித்து இயக்குனர் சினிஷ் பேசுகையில், ” அருமையாக வந்துள்ள இப்படத்தை எந்த வித கட்டும் இன்றி வெளிகொண்டுவருவதில் ஆவலோடு இருந்தேன். படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கு சம்பந்தம் இருப்பதால் எந்தவித கட்டும் இல்லாமல் படத்தை வெளிகொண்டுவருவதில் முனைப்போடு இருந்தேன். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் வழங்கினர். எல்லா வேலைகளும் முடிந்து ‘பலூன்’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. மிக விரைவில் ரிலீஸ் செய்யப்படும் ”.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]