விபத்தில் 7 இராணுவ வீரர்கள் தவறிவிட்டனர்

மெக்சிக்கோவில் ஹெலிகொப்டரொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மெக்சிக்கோவின் வட மாநிலமான டுடரங்கோவில் நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மெக்சிக்கோ அவர்கள் தெரிவித்துள்ளனர்.