ராஜபக்ஷவின் வீட்டிற்கு ஆயுதத்துடன் நுழைய முற்பட்டமை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு ஆயுதத்துடன் நுழைய முற்பட்டமை தொடர்பில் கைதானவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அவர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அவரை சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக அங்கொட மனநல மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.