துப்பாக்கிகள் விற்பனை செய்து வந்தவர் கைது  

gunsதுப்பாக்கிகளை விற்பனைச் செய்த ஒருவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதான குறித்த நபர், ரூபா 5 ஆயிரத்திற்கும் 10 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட தொகைக்கு அவர் துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்துவந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

அதன்போது அவரிடம் இருந்து 7 துப்பாக்கிகள், 3 கட்டுத்துப்பாக்கிகள் மற்றும் குறித்த துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2 ஆயிரம் ரவைகள், ஒரு கிலோ கிராம் வெடிப்பொருட்கள் என்பவற்றுடன் வெடிப்பொருட்களை சோதனை செய்யப்பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]