பிக்குகளின் கௌரவத்தை பாதுகாப்பது பௌத்த மக்களின் பொறுப்பு

பிக்குகளின் கௌரவத்தைபௌத்த தேரர்களது கௌரவத்தினை பாதுகாப்பது பௌத்த மக்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக சிலர் கூறிவருகின்றனர்.

அது தவறு, புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் சிறிதளவேனும் குறைக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தேரர்களது கௌரவத்தை பாதுகாப்பது ஒவ்வொறு பௌத்தர்களது கடமை எனவம் அவர் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.