45 வயதில் பெண் குழந்தைக்கு தந்தையான பிரபல ஹாலிவுட் நடிகர்- அட இவர்தானா??

தற்போது ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டுவெயின் ஜான்சன் இவர் அடிப்படையில் ஒரு மல்யுத்த வீரர், அதன் மூலம் கிடைத்த புகழ் தான் ஹாலிவுட்க்கு அவரை அழைத்து சென்றது.

மல்யுத்த போட்டிகளில் இருந்து சினிமாவிற்கு வந்து ஒரு நல்ல இடத்தை பிடித்த வெகுசிலருள் இவரும் ஒருவர்.குறிப்பாக இவர் படங்களில் இருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்காகவே ரசிகர்களால் கொண்டாடப்படுவார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ரம்பஜே படம் கோடிக்கணக்கில் அங்கு வசூல் மழை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று மிக முக்கிய நாள், 45 வயதில் மீண்டும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகியுள்ளார் டுவெயின் ஜான்சன்.

இவருக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் குழந்தையுடன் போட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இரண்டாவது முறையாக தகப்பனான டுவைன் ஜான்சனுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]