ஒரு சில பௌத்த பேரினவாதிகள் செயலை வடமாகாண சபை கண்டிக்கின்றது

ஒரு சில பௌத்த பேரினவாதிகள் செயலை வடமாகாண சபை கண்டிக்கின்றது

வடமாகாண சபை

கொழும்பு கல்கிசைப் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த மியான்மார் முஸ்லிம் அகதிகள் மீது பௌத்த தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கவலையும் கண்டனத்தையும் வடமாகாண சபை வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 106 ஆவது அமர்வு இன்று அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் சிறப்பு விடயமாக மேற்படி விடயத்தை சபைக்குமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டு வந்து கருத்துக்களை தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது அவர் அங்கு தெரிவித்ததாவது,

காங்கேசன்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த மியான்மார் அகதிகள் சிலரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.பின்னர் அவர்கள் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன் போது அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் ஊடாக கல்கிசையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு சென்ற சில பௌத்த தீவிரவாதிகள் அந்த முஸ்லிம் மக்களை தாக்கியுள்ளதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அட்டகாசம் செய்துள்ளனர்.

பௌத்த தீவிரவாதிகளின் இந்த கொடூரமான செயலை வடக்கு மாகாண சபை கண்டிக்கின்றது என்றார். இதன் போது ஒரு சில பௌத்த பேரினவாதிகள் நடந்துகொண்டமையை வைத்து அனைவரையும் குறையாக சொல்ல வேண்டாம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக சபையில் கூறினார்.

இதேவேளை மியன்மார் அகதிகளை வடக்கில் தங்க வைத்து பராமரிக்க வடக்கு மாகாண சபை தயாராக இருப்பதாகவும் அந்த மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இதன் போது சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]