என்னை தவறா காட்டும் படங்களில் நடிக்க மாட்டேன்

நிக்கி கல்ராணிகவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்துள்ள அடல்ட் காமெடி படம், ஹர ஹர மஹாதேவகி. நாளை ரிலீசாகும் இதைப்பற்றி இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் கூறுகையில், ‘இது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் என்று, ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார். கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி இருவரும் தங்கள்  காதலை பிரேக்-அப் செய்கிறார்கள். அப்போது என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்று கதை நகர்கிறது.

ஹர ஹர மஹாதேவகி என்ற விடுதியில் கதை நடப்பதால், அதையே டைட்டிலாக வைத்துள்ளோம்’ என்றார். நிக்கி கல்ராணி கூறுகையில், ‘என்னைத் தவறாகக் காட்டும் படத்தில் நான் நடிக்க மாட்டேன். இதில் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை’ என்றார். கவுதம் கார்த்திக் கூறுகையில், ‘நான்கு நண்பர்கள் கூடினால் என்ன பேசுவார்களோ, அதுபோல்தான் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும்.

நிக்கி கல்ராணி

இதை ஏன் குடும்பத்துடன் பார்க்கக்கூடாது என்று சொல்கிறோம் என்றால், நாம் நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பல விஷயங்களை, நம் குடும்பத்தினர் மத்தியில் கண்டிப்பாகப் பேச மாட்டோம். அதனால்தான் இதை, ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் என்று சொல்கிறோம். படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, என் தந்தை கார்த்திக் விழுந்து, விழுந்து சிரித்தார்’ என்றார்.

நிக்கி கல்ராணி