4 மாத பச்சிளகுழந்தையின் வயிற்றில் இரும்புத் தடியால் சூடு வைத்த சாமியார் – காரணம் உள்ளே!

வயிற்றில் இரும்புத் தடியால் சூடு வைக்கப்பட்ட குழந்தை தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கரோய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராமகேரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின தொழிலாளர் உதைலால். இவருக்கு 4 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. அதற்கு தீவிர சளி மற்றும் இருமல் இருந்துள்ளது.

இதனால் உதைலால் குழந்தையை உள்ளூர் கோவிலில் உள்ள சாமியாரிடம் எடுத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாக சாமியார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இரும்புத் தடியால் வயிற்றில் சூடு போட்டுவிட்டு, இனிமேல் குழந்தைக்கு சளி, இருமல் தொல்லை வரவே வராது என்று கூறியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய போது, குழந்தையின் உடல்நிலை மோசமானது.

உடனே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அவர்கள் பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நிமோனியா இருப்பதை உறுதி செய்தனர்.

மேலும் இதயத்தில் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்தனர். உடல்நிலை மோசமடைந்ததால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் இதேபோல் 13 பேருக்கு நிமோனியா ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதிய அறிவின்மையால், சிகிச்சைக்காக சாமியார்களிடம் செல்வது தொடர்ந்து வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]