4 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 4 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக முன்னதாக நடத்தபட்ட நேர்முகத் தேர்வுகளில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக்கொண்டவர்களை முதலாவது கட்டமாக இணைத்துக்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்துக்கு 66 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]