381 ஓட்டங்களினால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

381 ஓட்டங்களினால் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 77 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.

முன்னதான மேற்கிந்திய தீவுகள் அணி தமது 2வது இன்னிங்ஸில் 6 விக்கட்டுக்களை இழந்து, 415 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி 381 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]