3,500 சிறுவர் பாலியல் இணையத்தளங்கள் முடக்கம்

கடந்த ஒரு மாதத்தில் 3,500 சிறார் பாலியல் இணையதளங்களை முடக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிறார் பாலியல் இணையதளங்களை முடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், சிறார் பாலியல் இணையதளங்கள் பிரச்சினைக்கு முழுவதும் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 3,500 சிறார் பாலியல் இணையதளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]