33 நாட்களுக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவு செய்தாரா மகிந்த? எதற்காக தெரியுமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச 33 நாட்களில் 800 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அவர் உலங்குவானூர்தியில் பயணம் செய்வதற்காக அவர் இந்த பணத்தை செலவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இரத்துச் செய்யும் யோசனை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை அதரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் பிரதமருக்கு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை சட்டவிரோதமான பிரதமர் பயன்படுத்தக் கூடாது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்று இன்றுடன் 33 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]