31 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்கொரிய அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம்

தென் கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் யுன் பியூங்-சே நேற்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் யுன் பியுன் சே இந்த விஜயத்தினை மேற்கொள்கின்றார்.

மேலும், இதன்போது இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் யுன் பியூங்-சே இன்று சந்தித்துவுள்ளார்.

இறுதியாக 1986ம் ஆண்டு தென் கொரிய வௌிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.