மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்படவுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அணைக்கட்டு

1957ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிப்புற்ற இவ்வணைக்கட்டானது அதன் பின்னர் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏதுவான நிலையில் இல்லாமல் வருடா வருடம் பல மில்லியன் ரூபாய்கள் செலவில் மண் கட்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டு வந்திருந்தது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வந்தனர்.

அணைக்கட்டு

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, கிழக்கு மாகாண முதலமைச்சர், பாராளுமன்றப் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அணைக்கட்டு

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் பாரிய முயற்சியின் பலனாக செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்த கிரான் புல்சேனை அணைக்கட்டு நிரந்தரமாக அமைத்தல் தொடர்பாக, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மத்திய அமைச்சோடு கலந்துரையாடி சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில், அதன் கள நிலவரங்களை ஆராய்வதற்கான மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.துரைசிங்கம் தலைமையிலான குழுவினருடன், கடந்த ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி செங்கலடி உறுகாமம் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் நிகழ்வில், இவ்வணைக்கட்டு புதிதாக நிரந்தரமாக அமைப்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டு, இது தொடர்பில் களஆய்வுச் செயற்பாடும் இடம்பெற்றது.

அணைக்கட்டு

இதனைத் தொடர்ந்து இவ்வணைக்கட்டு நிர்மானப்பணிகள் செப்டெம்பர் மாதம் அளவில் ஆரம்பிக்கப்படும் என மாகாண அமைச்சர் உட்பட நிர்வாகிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து அணைக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அணைக்கட்டு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]