நம்முடைய ஒவ்வொரு வயதிலும் நமது உடம்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வது இயல்பு.அதிலும் 30 வயது தொடங்கும் நேரத்தில் உடம்பின் செல் வளர்ச்சி, கல்லீரல், எலும்புகளில் கால்சியம் சத்து குறைபாடு இது போன்ற செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும்.

30 வயதினை அடைந்தவர்கள் அதிகப்படியாக காபி குடிக்கக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் எலும்புகளை பலவீனமாக்கி, உடம்பின் எனர்ஜி மற்றும் செல் வளர்ச்சியை வேகமாக குறைக்கிறது.

தினமும் அதிகம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இதனால் நார்ச்சத்துக்கள் அதிகமாக கிடைப்பதால், இதய நோய்களை தடுத்து, செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

அன்றாட உணவில் 30 வயதினை உடையவர்கள் கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலம் இது போன்ற சத்துக்கள் அவசியம் என்பதால், கீரையை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் மோர், பால் ஆகிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இதனால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படுகிறது.

30 வயதில் வளர்சிதை மாற்றம்(Metabolism) குறைவு, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அதிகமாக தேங்காய், அவகாடோ மற்றும் நல்லெண்ணெய் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.