30 வயதுக்கு மேல் ஆண்களிடம் ஏற்படும் 7 திடீர் மாற்றங்கள்!

ஒவ்வொரு வயதிலும் நம்மிடம் ஒருசில மாற்றங்கள் திடீரென மழையில் முளைத்த காளான் போன்று தென்படும். மழை பருவத்தில் இருந்து பள்ளி பருவம், பள்ளி பருவத்தில் இருந்து இளமை பருவம், இளமை பருவத்தில் இருந்து இல்லற பருவம் என பல பருவங்களில் பல மாற்றங்கள் காண்போம்.

அதில், முக்கியமாக முப்பதுகளில் இல்லற பருவத்தில் பயணிக்கும் போது ஆண்களிடம் ஏற்படும் 7 திடீர் மாற்றங்கள் பற்றி இங்கு காணலாம்…

ஆழ்ந்த சிந்தனை!

எதை பற்றியும், யார் பற்றியும் யோசிக்க நேரம் கூட கொடுக்காத ஆண்கள் கூட, முப்பது வயதை கடந்த பிறகு அனைவரை பற்றியும் யோசிப்பார்கள். சிறு விஷயமாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்தே முடிவெடுப்பார்கள்.

அறிவுரைகள், கலந்தாலோசிப்பது!

சிலருக்கு அறிவுரை கூறுவதும் பிடிக்காது, வழங்குவதும் பிடிக்காது. ஆனால், முப்பது வயதை கடந்து பிறகான வாழ்க்கையில் அதிக அறிவுரைகள் தேவைப்படும். இருபது வயதில் நாம் செய்த அதே தவறை செய்யும் நபர்களை கண்டால் அவர்களுக்கு அறிவுரை வழங்க முனைவோம். எந்த ஒரு விஷயத்தையும் உடனே நம்பாமல், பலரிடம் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்போம்.

சேமிப்பு, திட்டமிடுதல்!

ஐநூறு, ஆயிரம் என பார்களில், பார்டி, சினிமா என செலவு செய்தவர்கள் சில்லறைகளை கூட சிதறவிட மாட்டார்கள். பணத்தை எப்படி எல்லாம் சேமிக்கலாம், எதில் எல்லாம் முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கும்.

அக்கறை, அனுசரணை!

பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு பார்க்காமல் குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அனுசரணையுடன் பழகுவார்கள்.

ஆரோக்கியம், மேலாண்மை!

உடல் ஆரோக்கியத்தின் மீதும், வீட்டின் மேலாண்மை மீதும் அதிக பொறுப்பு இருக்கும்.

சமூகத்தின் பார்வை!

வீடு என்று மட்டுமில்லாமல், சமூகத்தில் ஏற்படும் விஷயங்கள் மீதும் பார்வையை செலுத்துவார்கள். சமூகத்தில் ஏற்படும் தீங்கு, மாற்றங்கள் சுய வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை உண்டாக்கும் என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல நடந்துக் கொள்வார்கள்.

அரசியல் பொருளாதாரம்!

ஒவ்வொரு ஆணும் முப்பது வயதை கடந்த பிறகு பெரிய மாற்றமாக காண்பது அரசியல் மற்றும் பொருளாதாரம் மீது அதிகரிக்கும் அறிவும், தேடுதலும் தான். இவர் வெற்றிபெற்றால் நல்லதா? கெட்டதா? இந்த பட்ஜெட் நமது வீட்டு பட்ஜெட்டை பதம்பார்க்குமா இல்லையா? என கணக்கிடும் அளவிற்கு நீங்கள் முப்பதுகளில் புத்திசாலியாக இருக்க வேண்டும். இல்லையேல், கொஞ்சம் கஷ்டம் தான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]