பொலிஸ் நிலைய அதிபர் உள்ளிட்ட 30 பேர் விளக்கமறியலில்

இடி தாங்கி, தங்க நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிபர் உள்ளிட்ட 05 பொலிஸார் மற்றும் நான்கு பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இரண்டு சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போதிலும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரொய்ஸ் பெர்ணாந்தோவின் எழுதுவிளைஞரால் அந்த சந்தேகநபர்களை அடையாளம் காட்ட முடியவில்லை.

எவ்வாறாயினும் சந்தேகநபர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.