30வயதை நெருங்குபவர்களா நீங்கள்? அப்போ மிஸ் பண்ணாம கண்டிப்பா படிங்க!!

எல்லா வயதிலும் நமது உடலும், மனதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது.வயதிற்கேற்றாற்போல் மாறிக்கொண்டே இருக்கும்.
உடல் மற்றும் மனதில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க சாப்பிடும் உணவில் இருந்து, தூங்கும் நேரம் வரை நாம் பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதிலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக தங்களது பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பல நோய்களிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும் . மது அருந்துவது , புகை பிடிப்பது மட்டுமல்ல, நீங்கள் விரும்பி சாப்பிடும் எண்ணெய் சத்து, கொழுப்புச்சத்து அதிகமுள்ள நொறுக்குதீனிகள்,பிஸ்கட்டுகள்,பதப்படுத்தபட்ட உணவுப்பொருட்கள், அசைவஉணவுகள்,இனிப்பு வகைகள் என அனைத்தையும் குறைத்துக் கொள்வது அவசியம்.

வயது ஏற, ஏற உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், அந்த நேரத்திலும் நீங்கள் உடலுக்கு விஷமாக அமையும் இந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டு வந்தால், உடல்நிலை குறைபாடு அதிகமாக ஏற்படும்.

நீங்கள் இதுநாள் வரை உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் இனிமேலாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஜிம்மிற்கு தான் போக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. போனால், உடற்திறனை கொஞ்சம் அதிகமாக பேணிக்காக்க முடியும். இல்லையெனில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் 30 நிமிடங்கள் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம்.அதுமட்டுமின்றி உங்களுக்கு ஏற்படும் மன அழுத்ததை போக்கி மன அமைதியை பெற யோகா செய்வதும் மிக நல்லது.

உடல்நலம் பாதுகாக்க உங்களுக்கு மிக முக்கியமானது உறக்கம். சரியான நேரத்தில், சரியான அளவு உறக்கம் தேவை. தூக்கமின்மை தான் பல உடல்நல குறைபாடுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது.தூக்கமின்மை ஒரு வித மன அழுத்ததையும் ஏற்படுத்தும். எனவே, எந்த வேலையாக இருந்தாலும் இரவு சரியான நேரத்தில் உறங்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

மேலும் முப்பதை கடக்கும் போது பலருக்கு ஏற்படும் முதல் வலி, பல் வலி தான். எனவே, பல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.பற்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு காலம்தாழ்த்தாமல் உடனே சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது இல்லையெனில் ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும் மென்று சாப்பிட முடியாமல் போய் விடும்.

வேலைக்கு சேர்ந்த பிறகு நண்பர்களுடனான நெருக்கம் குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, நண்பர்களுடன் மட்டுமே நாம் என்றும் வெளிப்படையாக இருக்க முடியும்,மனதில் பட்டதெல்லாம் பேசமுடியும்.அதனால் மனமும் , உடலும் என்றும் ஆரோக்கியமாக இருக்கும் அதனாலே நட்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள். நண்பர்களை விட வேறு யாரும் உங்களை மகிழ்வாய் வைத்துக்கொள்ள முடியாது. உங்கள் மனதை உறுதியாய் வைத்துக் கொள்ள ஒரே மருந்து நண்பர்கள் தான்.

தயவுசெய்து வேலை, வேலை என்று மெட்ரோ ரயிலை போல ஓடிக்கொண்டிருக்காமல் உங்கள் வாழ்வில் உங்களோடு பயணித்து வரும் உறவுகளையும் கொஞ்சம் ஏறெடுத்து பாருங்கள். வேலை தரும் மன அழுத்தத்தை குறைக்க உலகிலேயே சிறந்த மருந்து உறவுகள் தான்.அவர்களோடு நேரம் செலவிடுங்கள்,வெளியே அழைத்து செல்லுங்கள்.,அவர்களோடு மனம் விட்டு பேசுங்கள்.

முப்பதை கடக்கும் போது கண்டிப்பாக சில உடல்நல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நமது உணவு பழக்கத்தின் மாறுபாட்டினால், இப்போதெல்லாம் நீரிழிவு நோய் யாருக்கு, எப்போது வருகிறது என்றே தெரிவதில்லை.எனவே உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உங்களுக்கு கண்டிப்பாக உணவு கட்டுப்பாடு தேவை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]