3 மாத குழந்தையை பரிதவிக்கவிட்டு சென்ற தாய்- மன்னாரில் சம்பவம்

3 மாத குழந்தையை வீட்டிலேயே விட்டுட்டு பெண் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறித்த சம்பவம் மன்னாரில் உள்ள ஒரு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும், கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்த ஜோதினி – அமுதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தம்பதிகளுக்கு கடந்த 07-ம் மாதம் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ள நிலையில் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு அமுதன் வீட்டுக்கு வந்த போது குழந்தை மட்டும் தனியாக கத்திக்கொண்டிருந்திருக்கிறது.

உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு அமுதன் அப்பகுதி எங்கும் மனைவியை தேடியலைந்தும் மனைவி எங்கேயும் இல்லை, உடனே மனைவிக்கு என்ன நடந்தது என்று பதறிய கணவன் பொலிஸில் முறைப்பாடு கொடுக்க தயாரான போது, வீட்டுக்குலிருந்த மேசையில் என்னை யாரும் தேட வேண்டாம் என ஒரு கடிதம் இருந்ததை கண்டு நொருங்கிப்போனார் அமுதன் தற்போது என்ன செய்வதறியாது மூன்று மாத குழந்தையுடன் அமுதன் தவித்து வருகிறார், இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஜோதினி மீது அப்பகுதி மக்கள் பெரும் கோபத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]