3 கூட்டமைப்பு உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் தாவ தயாராம்- சூடு பிடிக்கும் அரசியல்களம்

புதிதாக நியமனம் பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றில் நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.

இந்நிலையில் இப்போது வரைக்கும் 101 உறுப்பினர்கள் மஹிந்த தரப்பில் இருக்கின்றனர். ஏனைய கட்சிகளில் ஜே.வி.பி யின் 7 உறுப்பினர்களும் தமது ஆதரவு எந்தவொரு தனி நபருக்கும் இல்லை என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பலர் மஹிந்த பக்கம் வருவார்கள் என கூறப்பட்டு வந்தாலும் இன்னமும் இது தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

இதன் காரணமாக பேரம் பேசல் மும்முரமாக நடந்து வருகின்றது. தற்போது உள்ள நிலவரங்கள் படி 50 கோடி வரை பேரம் பேசல் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி, பிரதியமைச்சர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளுடன் 50 கோடி ரூபாய் வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க தமிழ் கூட்டமைப்பின் மீதே அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

கூட்டமைப்பில் இருக்கும் 16 உறுப்பினர்களும் தலைமையின் முடிவுடன் ஒத்து போவதாக இருக்கின்றார்களா அல்லது கோடிகளில் ஆசை கொண்டவர்களாக உள்ளனரா என்பதே இப்போது இருக்கும் கேள்வி.

கூட்டமைப்பு தலைமையை பொறுத்தவரை , இந்தியாவின் ஆலோசனைப்படி ரணிலுக்கே அவர்களின் ஆதரவு இருக்க போகின்றது.

எனினும் இன்று முன்னாள் பிரதி அமைச்சர் கருணா கூறியுள்ள கருத்துக்களின் பிரகாரம் 3 கூட்டமைப்பு உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் தாவ தயார் என தகவல்கள் கசிந்துள்ளது.

இதன் உண்மை தன்மை பற்றி அறிய இன்னும் சில நாட்கள் காத்திருந்தே ஆகவேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]