யாழில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை

கடந்த 13 வருடங்களில் யாழ். மேல் நீதிமன்றில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற புள்ளிவிபரங்களில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற எல்லைகுட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றம் யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.

மேற்குறிப்பட்ட நீதிபதிகளின் சேவைக் காலப்பகுதியிலேயே மேற்குறித்த 41 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]