3வது டெஸ்ட் போட்டியில் இருந்து தினேஸ் சந்திமால் நீக்கம்!

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சந்திமால் உபாதைக்குள்ளானார். பின்னர் நடைப்பெற்ற உடற்கட்டு சோதனையில் தேர்ச்சி அடையவில்லை.

இதன் காரணமாக இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மூன்று போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]