3டி திரைப்படத்தில் ஜி.வி

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன்.

ஜிவிபிரகாஷ்

இதில் சிம்பு படம் ஓடாததால் கடுமையான விமர்சனத்துக்குள்ளான இவர், அதைப் பொருட்படுத்தாமல், மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுவருகிறது.

முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் நடிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

3டி கேமராவில் ஒளிப்பதிவு செய்யப்படும் இந்தப் படத்துக்கு, “வெர்ஜின் மாப்ள” என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]