3ஆவது போட்டியில் இருந்தும் விலகும் ஹேரத்

இந்தியாவிற்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரங்கனஹேரத் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி 3-ஆவது டெஸ்டிற்கு தயாராகி வரும நிலையில், அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹேரத் காயத்தால் விலகியுள்ளார். வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருவதால் இலங்கை அணி கவலையடைந்துள்ளது.

முதல் போட்டிக்கு முன்பு தலைவர் சண்டிமலுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முதல் டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. முதல் டெஸ்டில் பீல்டிங் செய்யும்போது குணரத்னேவிற்கு விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அத்துடன் வெளியேறி அவர், தொடர் முழுவதிலும் இருந்து விலகினார்.

2-ஆவது டெஸ்டின்போது வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். அவர் 3-ஆவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையிலேயே தற்போது ஹேரத்தும் 3ஆவது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]