முகப்பு News Local News 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

நொட்டிங்காமில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின் போது, இரண்டு விக்கட்டுக்களை இழந்த நிலையில் 124 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக இந்திய அணி தமது முதல் இனிங்சிற்காக 329 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்சில் 161 ஓட்டங்களையே பெற்றது.

அதன்படி, இந்திய அணி தமது இரண்டாவது இனிங்சில் 8 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 292 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com