291 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை தோல்வியில் இருந்து தப்புமா ?

காலியில் நடைபெற்றுவரும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ஓட்டங்களை ஆல்-அவுட் ஆனது.

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடந்துவருகிறது. நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 600 ஓட்டங்களை தனது முதலாவது இன்னிஸுக்கா குவித்தது. ஷிகர் தவான் (190 ரன்), புஜாரா (153) ஆகியோர் சதம் அடித்தனர். ரகானே 57 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 50 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்து வீச்சில் திணறியது. கருணா ரத்னே 2 ரன்னிலும், குணதிலகா 16 ரன்னிலும், குசல்மென்டிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். தரங்கா 64 ரன்னில், டிக்வெலா 8 ரன்னில் வெளியேறினர்.

நேற்றுமுன்தின (வியாழக்கிமை0 2ஆம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 44 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை எடுத்து இருந்தது. மேத்யூஸ் 54 ரன்னுடனும், தில்ருவான் பெரேரா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை தொட இலங்கை இன்னும் 247 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 3ஆம் நாள் ஆட்டம் நடந்தது. மேத்யூசும், தில்ருவான் பெரேரா தொடர்ந்து விளையாடினார்கள்.

இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57-ஆவது ஓவரில் இலங்கை 200 ஓட்டங்களை தொட்டது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் மேத்யூஸ் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவர் 130 பந்தில் 83 ரன் எடுத்தார். அடுத்து தில்ருவான் பெரேராவுடன் தலைவர் ஹெராத்துடன் ஜோடி சேர்ந்தார்.

பெரேரா 94 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியையும் ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் ஹெராத் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதீப் களம் வந்தார். மறுமுனையில் இருந்ததில் ருவான் பெரேரா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பவுண்டரி, சிக்சர்களாக அடித்தார். உணவு இடைவேளையின் போது இலங்கை 77 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ஒட்டங்காளை எடுத்திருந்தது. பெரேரா 90 ரன்னுடனும், குமாரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு குமாரா அவுட் ஆனார். காயத்தால் விலகியுள்ள குணரத்னே ஆடவில்லை. இதனால் இலங்கை அணி 291 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிஸுக்காக விளையாடிவருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]