285 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து அணி

தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களைப்  பெற்றுக்கொண்டது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் சேம் கரன் அதிகப்பட்சமாக 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஜோஸ் பட்லர் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

மலிந்த புஸ்பகுமார மூன்று விக்கட்டுக்களையும் , அகில தனஞ்சய 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]