928 கிலோ போதைப் பொருளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு

போதைப் பொருளைஇலங்கையில் கடந்த ஆண்டு பிடிபட்ட 928 கிலோ கொகையின் போதைப் பொருளை பகிரங்கமாக அழித்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் இந்த மாத முடிவுக்குள், பகிரங்கமான ஒரு இடத்தில் இவற்றை அழித்துவிட போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தயாராகி வருகின்றது.

“கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை நீதிமன்ற நடவடிக்கை முடிவடையும் வரை பாதுகாத்து வைப்பது வழக்கமான நடைமுறையாகும். இவ்வாறு அதிக அளவிலான போதைப் பொருட்களை சேமித்து வைப்பதில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணவே அவற்றை அழித்துவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான மூத்த துணை போலீஸ் மா அதிபதி எம்.ஆர். லத்தீப் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ள தகவல்களின்படி பகிரங்கமாக அழிக்கப்படவுள்ள 928 கிலோ எடையுடைய கொகையின் போதைப் பொருளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் ரூபா 38 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முழுவதும் கடந்த வருடத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பிடிபட்டவற்றின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]