27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…

தமிழ் சினிமாவிலேயே, ஏன் இந்திய சினிமாவிலேயே உச்சம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அதற்கு பேட்ட திரைப்படத்தில் அவர் பெற்ற 65 கோடி சம்பளமே ஆதாரம்.

உலக அளவில் ரசிகர்களிடம் இப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் சூப்பர் ஸ்டாரையே பின்னுக்கு தள்ளி வரலாறு காணாத சாதனை படைத்து இருக்கிறார் தல அஜித்.

கடந்த 10-ம் தேதி விஸ்வாசம் திரைப்படத்துடன், பேட்ட எனும் பிரமாண்டம் மோதியது. ரஜினிக்கு இருக்கும் மார்க்கெட் மதிப்பிற்கு, இந்த மாபெரும் மோதலில், ‘பேட்ட’ திரைப்படமே வசூலில் வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடந்ததோ எவரும் எதிர்பாராத ஒன்று, விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தமிழகத்தில் விஸ்வாசம், பேட்டையை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்திருந்தது.

இது எத்தகைய சாதனை என்றால், கடந்த 27 வருடங்களாக தன்னுடன் மோதிய திரைப்படங்கள் அனைத்தையும் மண்ணை கவ்வ செய்து, வசூலில் முடி சூட மன்னனாகவே இருந்து வந்தவரை பின்னுக்கு தள்ளி இருப்பதுதான்.

கடந்த 1992ம் ஆண்டு கமலின் தேவர் மகன் படத்தோடு மோதிய, ரஜினியின் பாண்டியன் திரைப்படம் தோன்றிருந்தே, அவரது இறுதி பின்னடைவாக இருந்து வந்தது. இந்நிலையில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு சாதனையை நடிகர் அஜித்தின் விஸ்வாசம் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]