264 கிலோகிராம் கழிவு தேயிலை கைப்பற்றல்

சுமார் 264 கிலோகிராம் கழிவு தேயிலை தூளுடன் 18 வயதுடைய இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை வெலிமடை புகுல்பொல பகுதியில் வைத்து குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கெப் ரக வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம் இல்லாமல் குறித்த கழிவு தேயிலை தூளை கொண்டுசென்ற போது, பதுளை – வெலிமடை பிரதான வீதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூள் மற்றும் வாகனம் என்பவை வெலிமடை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சந்தேக நபரான இளைஞனை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.