முத்தம் கேட்ட நடிகர் – கதறி அழுத நடிகை!

அந்த பவரான நடிகர் ஆரம்பத்தில் கதாநாயகனாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவரை காமெடியனாகத்தான் சினிமா உலகம் பார்க்க ஆரம்பித்தது.

அதனால், சுதாரித்துக்கொண்ட அந்த நடிகர் அடுத்தடுத்து காமெடி வேடத்தில் நடித்து பிசியானார். முன்னணி நடிகர்களின் படங்களில்கூட அவரை காமெடியனாக நடிக்க வைக்க போட்டி போட்டனர்.

அந்தளவுக்கு பெரிய காமெடி நடிகராக வலம் வந்த அந்த பவரான நடிகர், சில படங்களில் தனக்கும் ஹீரோயின் வேண்டும் என்று அடம்பிடித்த கதையெல்லாம் அரங்கேறியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தற்போது, அந்த நடிகர் ஒரு படத்தில் தனக்கு ஹீரோயினியிடம் முத்தக்காட்சி வைக்கவேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டாராம்.

இயக்குனரும் பெரிய தயக்கத்துடனேயே அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவரிடம் போய், அந்த நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்குமாறு கேட்டாராம்.

ஆனால், அந்த நடிகையோ முத்தக்காட்சியில் எல்லாம் நடிக்க முடியாது, அதுவும் அந்த நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு, தனது அறையில் சென்று கதறி அழுதாராம்.
முத்தம் கேட்ட நடிகர்
இதனால் பதறிப்போன அந்த இயக்குனர் அந்த காட்சியை எடுக்கமுடியாது என்று நடிகரிடம் தடாலடியாக கூறிவிட்டாராம். நடிகருக்கு இதனால் பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டதாம்.