250 சர்வதேச நிபுணர்கள் பங்கேற்ற சிறார் சுகாதார மாநாடு – ஜனாதிபதி தலைமையில்

250 சர்வதேச நிபுணர்கள் பங்கேற்ற சிறார் சுகாதார மாநாடு – ஜனாதிபதி தலைமையில்

சிறார் சுகாதாரம் தொடர்பான சர்வதேச நிபுணர் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் குறித்த நிகழ்வு நேற்று கொழும்பில் ஆரம்பமாகியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை சிறார் நோய் தடுப்பு மருத்துவர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டினை முன்னிட்டு இந்த சந்திப்புகள் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 42 நாடுகளின் சிறார் சுகாதார விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் 250 பேர் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறார்களுக்கான நோய்த் தொற்றுகள் தொடர்பான சர்வதேச மட்ட அனுபவங்களை பறிமாற்றிக் கொள்ளல், மற்றும் பரிசோதனைகளின் வௌிப்பாடுகளை பகிர்தல், தரங்களை இனங்காணல் உள்ளிட்ட விடயங்கள் இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]