25 ஆயிரம் ரூபா தண்டபணம் குறித்த இறுதியறிக்கை விரைவில்..

போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குழுவின் இறுதியறிக்கை எதிர்வரும் 9ம் திகதி தயாரிக்கப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 10 ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது இறுதியறிக்கையை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.