2,490,000 ரூபா பெறுமதியுடைய வௌிநாட்டு சிகரட் பெக்கெட்டுகளுடன் மூவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (26) அதிகாலை சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவிப்பதோடு கைது செய்யப்பட்டவர்கள் காலி மற்றும் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 31, 28 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் காலை 6 மணி அளவில் சார்ஜாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஜீ 90501 இலக்க விமானத்தில் வருகை தந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் இருந்து 249 வௌிநாட்டு சிகரட் பெக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 49,800 சிகரட்டுகள் அடங்கியுள்ளதாகவும் இவை சுமார் 2,490,000 ரூபா பெறுமதியுடையவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]