248 கிலோகிராம் கேரளா கஞ்சா கண்டெடுப்பு

பூநகரி, சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இருந்து 248 கிலோகிராம் கேரளா கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

படகு மூலம் கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவை காரில் ஏற்றுவதற்கு தயாராவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேரளா கஞ்சாவை எடுத்து வந்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்காக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.