248 ‘உள்ளூராட்சி சபை’களுக்கான இன்றுமுதல் வேட்புமனுக்கள்

248 ‘உள்ளூராட்சி சபை’களுக்கான இன்றுமுதல் வேட்புமனுக்கள்

248 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இரண்டாவது கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட 248 உள்ளூராட்சி சபைகளுக்கும் இன்று தொடக்கம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

ஏற்கனவே கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி 248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

காலஎல்லை நிறைவடைந்த பின்னர், மொத்தமுள்ள 241 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிடுவார் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]