24 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்த ஸாம்பியா விமானம்

24 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சேவையை ஸாம்பியா விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

எத்தியோப்பியன் விமான சேவை நிறுவனத்துடன் 30 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதன் ஊடாக அதன் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸாம்பியா ஏர்வேஸ் நிறுவனமானது, ஆபிரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு விமான சேவையை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதனைமுன்னிட்டு 12 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளவும், இந்த வருடம் தொடக்கம் சுமார் 1.9 மில்லியன் பயணிகளையும், உடைமைகளையும் கையாள்வதற்கு எண்ணியுள்ளதாக விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் ஸாம்பிய அரசாங்கத்தின் பிரதான அபிவிருத்தி முகவர் நிறுவனம் 55 சதவீத பங்கினையும், எத்தியோப்பிய விமான சேவை நிறுவனம் 45 சதவீத பங்கினையும் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சேவைகளின் ஊடாக ஸாம்பியா தனது வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த விடயங்களை மேற்படுத்த எண்ணியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]