227 பயணிகளுடன் ஓடுதளத்தில் விபத்துக்குள்ளான இலங்கை விமானம்

இலங்கை விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், ஓடுதளத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்ட ul 167 என்ற விமானமே சிறிய விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரமொன்று ஓடுதளத்தின் எல்லையில் காணப்பட்ட விளக்கில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.

பின்னர், சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டதுடன், நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது.

அத்துடன், இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]