21 வயதான இளம் தாய்க்கும், சிசுவிற்கும் ஏற்பட்ட பரிதாப நிலை!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியை சேர்ந்த 21 வயதான இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கர்ப்பிணியாக இருந்த குறித்த இளம் பெண் வயிற்று குற்று காரணமாக கடந்த 11 ஆம் திகதி மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினமே அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

அதன் பின்னர் ஏற்பட்ட அதீத குருதிப்பெருக்கின் காரணமாக குறித்த பெண் கோமா நிலை அடைந்துள்ளார். குழந்தையின் நிலையும் சற்று பாரதூரமாக இருந்ததால் குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.ஆனால் குறித்த குழந்தை அன்று இரவு 7.00 மணியளவில் உயிரிழந்துள்ளது. அத்துடன், குறித்த பெண் அன்றைய தினம் இரவு யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பகுதிக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலன்னின்றி நேற்று குறித்த இளம் தாய் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை மரணவிசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]