2025இல் மலையகத்தில் ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி : இராதாவின் கனவு

மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் அதற்கு அனைவரும் கல்வி கற்க வேண்டும். அதனாலேயோ மயைக கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு செயற்திட்டங்கள முன்னெடுக்கபட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு வரும்போது ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டுமென்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கும் வீடமைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்க்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

பெருந்தோட்ட மக்களின் வருமைக்கு காரணம் மக்களிடையே கல்வி அறிவு இன்மையே. இன்று கொழும்பு மற்றும் தன வந்தகர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் என்றதும் மலையகத்தையே நாடுகின்றனர். காரணம் இவர்கள் படிக்கவில்லை வீட்டு வேலைக்கு வருவார்கள் என்று. நாங்கள் நன்கு படித்து இருந்திருந்தால் இந் நிலை ஏற்பட்டு இருக்குமா? அதனால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி நன்றாக படிக்க வையுங்கள். அதற்கான வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளபட்டு வருகின்றோம். தற்போது 13 வருடம் கல்வி கட்டாய கல்வியாக மாற்றபட்டள்ளது. சாதாரண தரம் சித்தியெய்தாவிட்டாலும் உயர்தரத்தில் தொழில் வாய்ப்புக்கான கல்வியை தொடர முடியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]