2020வது வரை ‘ரணில் விக்ரமசிங்க’வே பிரதமர்

ரணில் விக்ரமசிங்க

2020வது வரை ‘ரணில் விக்ரமசிங்க’வே பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அம்பேவெல ஹைலன்ட் பால் பண்ணைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இன்று (21) இதனைக் கூறினார்.

அவர் அங்கு கூறுகையில், “நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக சபைகளை கைப்பற்றியுள்ளது. ஏனைய சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

“2020 ஆம் ஆண்டுவரை பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருப்பார். ஜனாதிபதி தேர்தலின் போது ஊழலை ஒழித்து ஊழல்செய்தவர்களை கைது செய்வதாக கூறியே மைத்திரிபால சிறிசேன ஐனாதிபதியானார்.

“அந்த வாக்குறுதிக்கமைய ஊழல்செய்தவர்களை கைதுசெய்ய புதிய சட்டமொன்று உருவாக்கப்படுக்கின்றது. இதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் இப்போதே எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]